fbpx

ரூ.10 லட்சம் காப்பீடு, ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 3 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தக்ஷின கன்னடா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். உடுப்பியில் உள்ள கபு என்ற இடத்தில் மீனவர் அமைப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ”கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் வாங்கி இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏக்களே கூறியுள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தை பாஜகவினர் கல்வி, சுகாதாரத் தேவைக்காக பயன்படுத்தவில்லை. மாறாக அவர்களுடைய சில கோடீஸ்வர நண்பர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பணம் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வோம். எங்களின் ஆட்சியில் நிச்சயம் ஊழல் இருக்காது என உறுதி அளிக்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமோ பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடும் ரூ.1 லட்சம் வட்டியில்லா கடனும் வழங்கப்படும். மீன்பிடி படகுகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.25 மானியம் வழங்கப்படும். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் செயல்படுத்தப்படும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Chella

Next Post

தமிழகத்தில் மே மாதம் 1ம் தேதி……! குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு…..!

Fri Apr 28 , 2023
டாஸ்மாக் மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் உள்ளிட்ட தினங்களில் தமிழ்நாடு முழுவதும் மூடப்படுவது வழக்கம். அந்த விதத்தில், மே தினத்தை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசும் அரசு […]

You May Like