fbpx

39 டாட் பால்!… ஒரே போட்டியில் ஓடாமலே சாதனை படைத்த லக்னோ!… ரசிகர்கள் ஆச்சரியம்!… ரெக்கார்ட்ஸ் விவரம்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தரப்பில் 27 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் என மொத்தமாக லக்னோ அணி 39 டாட் பால்களை விளையாடி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற ஷிகர் தவான், பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த 8 ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ள நிலையில், ஷிகர் தவான் சேஸிங்கை தேர்வு செய்தார்.

இந்த முடிவு சரிதானா என்ற கேள்வி லக்னோ அணியின் பேட்டிங் முடிவடைந்த பின், ஷிகர் தவானுக்கு நிச்சயம் தோன்றி இருக்கும். அந்த அளவிற்கு லக்னோ அணி மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளது. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை லக்னோ அணி பதிவு செய்துள்ளது.

லக்னோ அணி சார்பாக ஆடிய கைல் மேயர்ஸ் 54 ரன்களும், ஆயுஷ் பதோனி 43 ரன்களும், ஸ்டாய்னிஸ் 72 ரன்களும், பூரன் 45 ரன்களும் விளாசினார். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்கப்பட்டு கொண்டே இருந்தது. அதுவே லக்னோ அணியின் இமாலக ஸ்கோருக்கு காரணமாக அமைந்தது. லக்னோ அணியின் பேட்டிங்கின் போது ஒட்டுமொத்தமாக 27 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 6 பவுண்டரியும், 5 சிக்சர்களையும் விளாசினார்.

இதன் மூலம் லக்னோ அணி மொத்தமாக 192 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்சர்கள் மூலமாக எடுத்துள்ளது. இதனால் 65 ரன்களை மட்டுமே லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்துள்ளனர். இத்தனைக்கும் 39 டாட் பந்துகளை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் வீசியுள்ளனர். இருப்பினும் இமாலய ஸ்கோர் அடிக்கப்பட்டுள்ளது. எப்போதும் ஆடாம ஜெய்த்தோம் என்று சொல்லுவார்கள். ஆனால் லக்னோ அணி ஓடாமலேயே ரன் மலையை குவித்துள்ளது. லக்னோ அணியின் இந்த சாதனை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அணியின் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் முதல் பந்து முதலே பவுண்டரிகளை விளாச முற்பட்டதே காரணம் என்று பார்க்கப்படுகிறது.

Kokila

Next Post

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தலாம்!... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

Sat Apr 29 , 2023
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரிய வழக்கில், தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசுத்தரப்பு தெரிவித்ததை ஏற்று […]

You May Like