பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி பாரதிய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஐந்து பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி அந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜர் மற்றும் டெபிட்டி மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொறியியல் படிப்பில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். பி டெக் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பிற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 30 ஆகவும் உச்சபட்ச வயது வரம்பு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக 30.000 ரூபாயிலிருந்து 1.60.000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு 472 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம். இந்த வேலை வாய்ப்பிற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் 28.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய தகவல்களை அறிய bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

மனித கழிவுகளை அகற்றும் ரோபோக்கள்!... வாட்டர் ப்ரூஃப், பயர் ப்ரூஃப் தன்மையுடன் வடிவமைப்பு!... கேரள அரசின் புதிய முயற்சி!...

Mon Feb 27 , 2023
மனித கழிவுகளை நவீன ரோபோக்கள் மூலம் அகற்றும் திட்டத்தை முதன்முறையாக கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் இந்த திட்டத்தை அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டீன் தொடங்கி வைத்தார். இந்த ரோபோவிற்கு பண்டிகூட் என பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்களை போன்றே கைகள், மூட்டு பகுதிகளை கொண்ட இந்த ரோபோ வாட்டர் ப்ரூஃப், பயர் ப்ரூஃப் தன்மை கொண்டது. மேலும், ஏதேனும் விஷ வாயு […]

You May Like