fbpx

சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 81 வயது முதியவர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை அடுத்துள்ளது கஜோல். இதன் அருகே இருக்கும் கிராமத்தில் பங்கின் சந்திர ராய் என்பவர் வசித்து வருகிறார். 81 வயது முதியவரான இவர், அங்கே தனியாக வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. அதில் 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று அந்த 4 வயது குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்ததால் குழந்தையை சரி வர கவனிக்கவில்லை. இதையறிந்த பங்கின் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர், குழந்தையிடம் விளையாடியுள்ளார். பின்னர் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த குழந்தை மறுத்ததும், சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

பின்னர் குழந்தையும் முதியவருடன் சென்றுள்ளார். அப்போது அவர், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சில மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை அவரது வீட்டு வாசலிலே கொண்டு வந்து விட்டுள்ளார். சில நிமிடங்களிலே சிறுமி கதறி அழுதுள்ளார். பின்னர் அவரது பெற்றோர் விசாரிக்கையில், தனது அந்தரங்க பகுதியை காண்பித்து, வலிக்கிறது என்றுள்ளார் அந்த சிறுமி. இதையடுத்து, பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், அந்த 81 வயது முதியவர் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த 4 வயது குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Sun May 7 , 2023
தமிழகத்தில் தற்போது பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இன்று நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகின்றது. ஆகவே நாளை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்ற சூழ்நிலையில், மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம்? எப்படி விண்ணப்பம் செய்யலாம்? கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? போன்ற அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இலவச எண் […]

You May Like