திருவண்ணாமலையில் உள்ள பே கோபுர தெருவில் வசிப்பவர் ரவிக்குமார் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருடைய மகள் தர்ஷா அந்த பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டனர்.
அதில் மாணவி தர்ஷா 589 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் முதன்மை மாணவியாக சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், அவருடைய சாதனையை அந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பாராட்டி இருக்கிறார். அதோடு இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, திருவண்ணாமலையில் உள்ள அரசு மாதிரி பள்ளி தொடர்ச்சியாக சாதனை படைத்திருக்கிறது. என்றும் மாதிரிப் பள்ளியைச் சார்ந்த 77 மாணவர்களில் 23 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் முழுமையான மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்