திரிபுரா மாநிலம் அமடாலி பைபாஸ் சாலையில், இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, இளம் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்பொழுது அந்தப் பெண்ணை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவியான அவர் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, மாணவிக்கு தெரிந்த கௌதம் சர்மா என்ற வாலிபர் மாணவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காரில் இருந்த கௌதம் சர்மாவின் நண்பர்கள் 2 பேர் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.
இதையடுத்து, கௌதம் சர்மா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அமடாலி பைபாஸ் சாலையில் மாணவியை காரில் இருந்து தள்ளி விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவியரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கௌதம் சர்மாவை கைது செய்தனர். மேலும், போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.