fbpx

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு..!! பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம்.

இதற்கு ஆசிரியர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது மே 15 முதல் மே 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காதலியை கர்ப்பமாக்கி கொடூரமாக கொன்று ஏரியில் புதைத்த காதலன்..!! 100 நாள் வேலைத் திட்டத்தால் வெளிவந்த உண்மை..!!

Fri May 12 , 2023
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி 100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது மண்ணிலிருந்து கை பகுதி தெரியவரவே அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஆய்வு செய்தபோது இளம்பெண் சடலம் ஒன்று புதைக்கபட்டிருந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு […]

You May Like