ஒரே போட்டியில் சாதனைகளை வாரி குவித்த ராயல்ஸ் பரம்பரை!… ரெக்கார்ட்ஸ் லிஸ்ட் இதோ!

கொல்கத்தாவிற்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல் அணி பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய ரெக்கார்ட்ஸ் படைத்துள்ளது.


ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பான இறுதிக்கட்ட போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்பில் வெறிகொண்டு விளையாடிவருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் அதிரடியால் 13.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியால் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் அணிமுதல் ஓவரில் எந்த எக்ஸ்ட்ரா ரன்களும் இல்லாமல், பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்ட ரன்கள் மூலமாக 26 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள், 3 போர்கள், மற்றும் 2 ரன்கள் அடித்தார். இதுவரை பெங்களூரு அணி 2019இல் ராஜஸ்தானுக்கு எதிராக முதல் ஓவரில் 23 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 150 ரன்கள் இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து, அதாவது 41 பந்துகள் மீதமுள்ள நிலையில் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் அணி, இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ராஜஸ்தான் அணி வீரர் சாஹல் இந்த போட்டியில் 4 விக்கெட்களை(4/25) எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை அணி வீரர் பிராவோ 183 விக்கெட்கள் வீழ்த்தி இதில் முதலிடத்தில் இருந்தார், தற்போது சாஹல் 187 விக்கெட்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் ராஜஸ்தான் அணி தொடக்கவீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 7 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்கள் என அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த கே.எல்.ராகுலின்(14 பந்துகளில் அரைசதம்) என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

KOKILA

Next Post

டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுபவர்களா நீங்கள்?... பின்விளைவுகள் ரொம்ப அதிகம்!... எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

Sat May 13 , 2023
டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதுவாக இன்று பலரின் வீடுகளில் உணவு உண்ணும்போது டிவி பார்த்து கொண்டோ அல்லது செல்போனை பார்த்து கொண்டோதான் சாப்பிடுகின்றனர் .இன்னும் சில இளைஞர்கள் செல்போனில் பேசிக்கொண்டே தான் சாப்பிடுகின்றனர் .இப்படி உணவின் மீது கவனம் இன்றி கண்டபடி சாப்பிடுவதால் நம் உடலில் பல பாதிப்புகளை சந்திக்கின்றோம் .இவ்வாறு சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம். டிவி […]
watching tv

You May Like