தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பாக்யராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர். சாந்தனு படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவர் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாந்தனு திருமணம் செய்து கொண்ட நிலையிலும் சரண்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவருக்கு தற்போது 38 வயது ஆகிறது.
இந்நிலையில், சரண்யா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சரண்யா, பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த சரண்யா பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகினார். சரண்யாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், கடைசியில் சரண்யாவின் காதல் தோல்வியில் முடிந்ததால் வீட்டில் முடங்கிய சரண்யா,
3 முறை தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரை தற்கொலை முயற்சியில் இருந்து பாக்யராஜ் தான் காப்பாற்றியுள்ளார். இதன் காரணமாகத்தான் 38 வயது ஆகியும் சரண்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சரண்யா தற்போது தனியாக ரீடைல்ஸ் மற்றும் ஷாப்பிங் தொழிலை ஆரம்பித்து செய்து வருகிறார். அதோடு நடிகை ஹன்சிகாவின் 51-வது படத்தில் ஸ்கிரீன் ப்ளே வேலையையும் செய்துள்ளார்.