வங்க கடலில் அதி தீவிர புயலாக வலு பெற்றுள்ள மோக்கா புயல் நாளை வங்கதேசம், வடக்கு மியான்மர் இடையே கரையை நோக்கி நகரும். இதனால், வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய இந்த புயல், நேற்று முன்தினம் தீவிர புயலாக வலுவடைந்தது.
அதேபோல நேற்று மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறி, அதே பகுதியில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு ,வட மேற்கு திசை நோக்கி சுமார் 530 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து, நாளை நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை நோக்கி நகரும் அப்போது 150 முதல் 175 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என்று தன்னுடைய செய்தி குறிப்பில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.