ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர்.
இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கூடுதல் அவகாசத்திலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுளது.