எஸ்பிஐ வங்கியின் சூப்பர் திட்டம்..!! Gpay, PhonePe பயனர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தே எளிதில் வேலையை முடித்துக் கொள்ளும் வகையில் பல புதிய திட்டங்களையும் எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.


இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் RuPay கிரெடிட் கார்டுகள் விரைவில் யுபிஐ உடன் இணைக்கப்படும் என்று எஸ்பிஐ கார்டு சிஇஓ ராம மோகன் ராவ் அமரா தெரிவித்துள்ளார். இந்திய அளவில் RuPay அதிக விநியோகம் செய்வது எஸ்பிஐ வங்கி தான். இவர்கள் யுபிஐ உடன் இணைந்து செயல்படும்போது கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான யுபிஐ பயனர்கள் பலன் பெறுவார்கள். இனி எளிதாக போன் நம்பர் மூலமாகவோ அல்லது கியூஆர் கோடு மூலமாகவோ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

உங்களுக்கு மீன் பிடிக்காதா..? அப்படினா இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!! அப்புறம் பிடிக்காதுன்னு சொல்ல மாட்டீங்க..!!

Mon May 15 , 2023
மீன் இயற்கையாகவே ஆரோக்கியம் நிறைந்த உணவு. அதனால் தான் குழந்தைகள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. என்னதான் அசைவ உணவு பிரியராக இருந்தாலும், நம்மில் பலருக்கு […]

You May Like