உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படி நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்வுகளில், சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்று ஒரு எதிர்பாராத நிகழ்வு உலக மக்கள் மற்றும் மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காரணம், மருத்துவ ரீதியாக சுமார் 8 நிமிடங்களுக்கு மேலாக இறந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 நிமிடங்களாக இறந்த நிலையில் இருந்த பெண் எப்படி உயிர்பெற்றார்?
அமெரிக்காவில் உள்ள கொலராடோ பகுதியைச் சேர்ந்த பிரியானா லாஃபர்டி, என்பவர் மரணத்தின் வாசலைக் கடந்து 8 நிமிடங்கள் சென்ற பிறகு மீண்டும் உயிர் பெற்று தனது வாழ்க்கைக்கான இரண்டாவது வாய்ப்பு பெற்று இப்போது மீண்டும் உயிருடன் நடமாடிக்கொண்டிருக்கிறார். 33 வயதான பிரியானா லாஃபர்டி மயோக்ளோனஸ் டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் – இது உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறாகும். அவரது உடல் செயல் இழந்து முடங்கிவிட்ட நிலையில், அவர் சிகிச்சை பெறும் போது சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக மரணமடைந்தவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு அவர் திடீரென உயிர் பிழைத்து விட்டார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் உயிர்பெற்ற அனுபவத்தை அப்பெண் பகிர்ந்துள்ளார். அதில், என் உடலிலிருந்து பிரிந்து மேலே மிதந்தபடி எனது உடலை பார்த்தேன். அங்கு எவ்வித வலி எதுவும் இல்லை. நேரம் என்றே இல்லாத ஒரு அமைதியான இடம். என்னுடைய எண்ணங்கள் உடனடியாக நிகழ்வுகளாக மாறியது போல இருந்தது. இறப்பு என்பது ஒரு மாயைதான்… ஆன்மா என்றும் உயிருடன் தான் இருக்கும்,” என அவர் கூறினார்.
பிரியானா லாஃபர்டி கூறியது என்ன? தான் தயாராக இருக்கிறேனா என்று கேட்கும் ஒரு குரல் கேட்டதாக லாஃபர்டி கூறினார். ஆனால், சிறிது நேரத்தில் அனைத்தும் இருட்டாகிவிட்டது என்றும், மருத்துவர்களால் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தனது நினைவு தன்னுடன் இறக்கவில்லை என்று பிரியானா லாஃபர்டி கூறினார். மேலும், “மரணம் ஒரு மாயை. ஏனென்றால், நமது ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது நினைவு உயிருடன் இருக்கும்.
மேலும், அந்த நிலையில் நமது எண்ணங்கள் அங்கு யதார்த்தத்தை வடிவமைக்கின்றன என்பதை உணர்ந்தேன். அதற்கு நேரம் எடுக்கும் மற்றும் இது ஒரு ஆசீர்வாதம் என்று லாஃபர்டி கூறியுள்ளார். திடீரென்று என் உடல் உடலிலிருந்து பிரிக்கப்பட்டது. நான் முற்றிலும் அசையாமல் இருந்தேன். ஆனால், நான் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன். வலி இல்லை. அமைதி மற்றும் தெளிவின் ஆழமான உணர்வு மட்டுமே இருந்தது என்றார்.
நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்? மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்கள் சிக்கலானவை மற்றும் விளக்குவது கடினம். ஆனால், விஞ்ஞானிகள் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மனித மூளை வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை மரணத்தின் விளிம்பில் இருப்பதால் விரைவாக மீண்டும் நினைவுபடுத்தக்கூடும் என்று கூறியது.