fbpx

’உங்கள நம்பி தான சார் வந்தோம்’..!! ’நீங்களும் இப்படி பண்றீங்களே’..!! கதறிய 18 பள்ளி மாணவிகள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் தில்ஹார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 18 பேர், அந்த பள்ளியின் கணினி பயிற்சி ஆசிரியர் முகமது அலி என்பவரிடம் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். அங்கு மாணவிகளை மிரட்டி அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே அச்சம் காரணமாக மாணவிகள் யாரும் இதனை வெளியே சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி, தன்னிடம் டியூசனுக்கு வந்த 18 மாணவிகளையும் தனித்தனியே வரச் சொல்லி, அவ்வப்போது ஆசிரியர் முகமது அலி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எனினும் கொடூரத்தை பொறுக்க முடியாத சில மாணவிகள், தலைமை ஆசிரியர் அனில்குமாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்காமல், அவரும் தொடர்ந்து மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதன் பிறகே மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், மாணவிகளின் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கணினி ஆசிரியர் முகமது அலி, தலைமை ஆசிரியர் அனில்குமார், உதவி ஆசிரியர் சாஜியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

பிரபல நடிகர் சுந்தர்ராஜனுக்கு இப்படி ஒரு நிலைமையா..? ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்..!!

Wed May 17 , 2023
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ரங்கதாஸ் (64). பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜிடம் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரங்கதாஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ”நான் கடந்த 2000ஆம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு சினிமா இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறேன். […]

You May Like