உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் காண்பூரைச் சேர்ந்த அனுஜ் என்ற மாணவர் படித்து வருகிறார். மேலும் இவர் தனுடன் படிக்கும் மாணவியான நேகா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதத்தில், திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கி எடுத்து காதலி நேகாவை சரமாரியாக சுட்டு இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
ஆகவே காதலி நேகாவை சுட்டு கொலை செய்த அனுஜ், பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிக்கு சென்று அங்கே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அந்த மாணவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.