fbpx

ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியர்கள் வழங்கிய உற்சாக வரவேற்பு….! குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்த பிரதமர்நரேந்திரமோடி…..!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் வரும் 24ஆம் தேதி வலையில் 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி 7 உச்சி மாநாட்டிற்காக முதலில் ஜப்பான் நாட்டிற்கு செல்லும் நரேந்திரமோடி, அங்கு நடைபெறும் இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

முதல் கட்டமாக நேற்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் அடிப்படையில், அந்த நாட்டில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றார். ஹிரோஷிமா நகரை அடைந்த அவருக்கு விமான நிலையத்தில் மலர் கொத்துக்களை வழங்கி அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர்.

அதன் பிறகு ஷெரட்டன் ஹோட்டல் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பை வழங்கினர். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி பிரதமரை அவர்கள் உற்சாகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பான் வாழ் இந்தியர்களின் குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார். அதன் பிறகு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களில் பிரதமருடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

அதன் பிறகு ஹிரோஷிமாவில் காந்தி சிலை ஒன்றை பிறந்தநாள் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தங்களுக்கு பிரதமரை சந்தித்ததும் அவருடன் பேசியதும் மிகுந்த மகிழ்ச்சியை வழங்குவதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Next Post

சினிமா பாடலுக்கு நடனமாடி…..! ஆளுநர் மற்றும் முதல்வரை வரவேற்ற மாணவிகள்….!

Sat May 20 , 2023
புதுவையில் பாக்குமுடையான் பேட்டில் இருக்கின்ற இதயா கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்ற மாணவிகள், பட்டுப்புடவை, அலங்கார நகை உள்ளிட்டவற்றை அணிந்து கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து, சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி உற்சாகமாக அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவி ரெஹானா என்பவர் […]

You May Like