கோடை வெப்பநிலையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிட்டலாம் என்பதை குறித்து காணலாம்.
வெந்தயம் சமயல் அறையில் மட்டும் பயன்படுத்தபடும் மசலா பொருள் அல்ல. இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும் மூலிகையில் ஒன்று ஆகும். இவற்றில் இருக்க கூடிய ஈஸ்ட்ரோஜன் அதிகம் கொண்டுள்ள இவை தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும்.ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்து அதில் கால் டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இளஞ்சுடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.
அநேக மருத்துவ குணங்களை பப்பாளிப்பழம் கொண்டுள்ளது. இளந்தாய்மார்களின் உடலில் ஆக்ஸிடாஸின் என்னும் ஹார்மோனை சுரக்க இது உதவுகிறது. எனவே தயக்கமில்லாமல் இதை சாப்பிடலாம்.பப்பாளி பழத்தை (காய் எடுக்க கூடாது) துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். மேலும் இதை சாலட்களில் சேர்த்தம் சாப்பிடலாம். இது தாய்ப்பாலின் அளவு மற்றும் தரத்தை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக செரிமானத்திற்கு உதவுகிறது.பெருஞ்சீரகம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இது தாய்க்கும் நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், பிறந்த குழந்தையின் பெருங்குடலை கட்டுப்படுத்த உதவுகிறது.பால் கொடுக்கும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதை நீரில் சேர்த்து கொதிக்க வைத்தும் தேநீராகவும் அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். குறிப்பாக உணவுக்கு பின் சிறிதளவு பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம். அது புத்துணர்ச்சியாக இருக்கும்.
கோடை வெயில் தாக்கம் சோர்வை உண்டாக்கும். இதனை எதிர்த்து போராட இனிப்பு உருளைக்கிழங்கு சாப்பிடவும். இது பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் உள்ளது. இதை குறைந்த நார்ச்சத்து உணவுகளுடன் இதை எடுக்கலாம்.இனிப்பு உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆவியில் வேக வைத்து சாப்பிட்டலாம் அல்லது புட்டு செய்து சாப்பிடலாம்.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ அரிப்பை தடுக்க பாதாம் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 ஆகியவை உள்ளது. இவற்றில் பிரசவத்திற்கு பின் ஏற்படும் வரிக்கோடுகளை நீக்கவும், அரிப்புகளை குணப்படுத்தவும் வேண்டிய சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள
ஒமேகா 3, பாலூட்டும் ஹார்மோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.பாதாமை அரைத்து பாலில் சேர்த்து குடிக்கலாம். இதனை இரவில் ஊறவைத்து மறுநாள் காலை, தோல் உரித்து சாப்பிடலாம்.
பார்லி பாலூட்டலை அதிகரிக்கவும், நீரேற்றத்தை சீராக்கவும் உதவுகிறது. இது லாக்டோஜெனிக் உணவு ஆகும்.இதில் பீட்டா- குளுக்கன் நிறைந்துள்ளது. இது பாலிசாக்கரைடு ஆகும். இது பாலூட்டலுக்கு காரணமான ப்ரோலாக்டினை அதிகரிக்கும்.பார்லியை தண்ணீரில் வேகவைத்து நாள் முழுவதும் அந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது அதனை அரைத்து தோசை மாவில் சேர்க்கலாம்.