உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்கை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. தினசரி இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். ரயிலில் பயணம் மேற்கொள்வது என்பது ஈஸியானது மற்றும் மலிவானது ஆகும். எனினும் ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயிலில் இருக்கும் எஞ்சின் விலை அதிகமானது மற்றும் அதிகளவு செலவு ஆகும். இப்போது இந்திய ரயில்களில் 2 வகை என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் மின்சார மற்றும் டீசல் என்ஜின்களானது அடங்கும்.
ஒரு இன்ஜின் தயாரிப்பதற்கு சுமார் 13 முதல் 20 கோடி ரூபாய் செலவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இயந்திரத்தின் நேரம் மற்றும் சக்தியை பொறுத்து விலை மாறுபடும். இந்திய ரயில்வே கோச் ஒன்றை தயார் செய்வதற்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இது போகியில் வழங்கப்படும் வசதியை பொறுத்து விலை வித்தியாசப்படும். ஒரு ரயிலை தயாரிக்க சுமார் ரூ.66 கோடி செலவாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு பயணிகள் ரயிலில் சுமார் 24 பெட்டிகள் இருக்கிறது. ஒவ்வொரு பெட்டிக்கும் சராசரியாக ரூ.2 கோடி செலவு ஆகும். இதன் காரணமாக போகிகளின் விலை 48 கோடி ரூபாயாக கணக்கிடப்படுகிறது. அதோடு ரயில் இன்ஜின் விலையானது 18 கோடி ரூபாய் வரை இருக்கிறது. நாட்டின் முதல் செமி அதிவேக இன்ஜின் இல்லாத ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 115 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது. செய்தி நிறுவனமான PTI-இன் அறிக்கையின் படி, புதிய தலைமுறை 16 பெட்டிகள் கொண்ட அதிவேக வந்தே பாரத் ரயிலை உருவாக்க சுமார் 110 முதல் 120 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
Read More : BREAKING | கூல்டிரிங்ஸ் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம்..!! தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவு..!!