fbpx

ரெடி…! இன்று முதல் 27-ம் தேதி வரை மட்டுமே…! துணைத்தேர்வுக்கு மறக்காம விண்ணப்பிக்கவும்…!

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு இன்று முதல்‌ 27-ம்‌ தேதி வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

இந்த நாட்களில்‌ விண்ணப்பம்‌ செய்யாதவர்கள்‌ சிறப்பு அனுமதி திட்டத்தில்‌ 30, 31 ஆகிய தேதிகளில்‌ விண்ணப்பிக்கலாம்‌.10-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள்‌ ஜூன்‌ மாதம்‌ 27 முதல்‌ ஜூலை மாதம்‌ 4-ம்‌ தேதி வரையில்‌ நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுகிறீர்களா?... அப்போ ராகி பிஸ்கெட்டுகள் சாப்பிடுங்கள்!... தயாரிக்க ரெசிபி!

Tue May 23 , 2023
உடல் எடையையை குறைப்பதற்காக நாம் நமது வீட்டிலே சில தின்பண்டங்களை மிகவும் ருசியாக செய்து சாப்பிடலாம். நாம் அனைவரும் நமக்கு பிடித்த உணவுகள், தின்பண்டங்கள் என வாங்கி சாப்பிட்டு வருகிறோம். ஆனால், இதனால் உடல் எடை அதிகரிப்பதற்கான பிரச்சினைகள் ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நமக்கு தின்பண்டங்கள் சாப்பிட ஆசையாக இருக்கும். எனவே பலரும் தங்களுக்கு பிடித்த தின்பண்டங்களை உடல் எடை அதிகரிப்பதற்கான பிரச்சனைகள் ஏற்படுவதால் சாப்பிடவே அச்சப்படுகிறார்கள்.ஆனால், இனிமேல் பயப்படாமல் […]

You May Like