fbpx

300 வது நாளைய எட்டியது….! பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்…..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2வது பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டனர். எதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கின்ற வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேற்படவூர் நாகப்பட்டு, ஏகனாபுரம், இடையார்பாக்கம், அக்கம்மாபுரம்,குணகரம்பாக்கம், சிங்கிள் பாடி மகாதேவி மங்கலம் போன்ற 13 கிராமங்களில் சுமார் 4,791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் ஒரு வருடத்திற்கு 100 மில்லியன் விமான பயணிகளை கையாளும் விதத்தில் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தான் இங்கே விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர். அதோடு கிராம சபைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். கடந்த வாரத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்திலும் மனுக்கள் வழங்கப்பட்டனர்.

இதற்காக தொடர்ந்து, நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 300வது நாளை ஏட்டியிருக்கிறது. நீர் ஆதாரங்களை அழித்து விமான நிலையம் அமைக்கப்படுவதை சுட்டிக்காட்டும் விதத்தில், ஏறி குளம் குட்டை கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீர் ஆதாரங்களை அழிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்திலும் ஏகனாபுரத்தில் இருக்கின்ற வயல் ஏரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று கொண்டனர். விளைநிலங்களையும், குடியிருப்புகளையும், ஏரி, குளங்களையும் அழித்து விமான நிலையம் வேண்டாம் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர் அதோடு போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.

Next Post

பணி நிரந்தரம் செய்திடுக….! பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டம்….!

Tue May 23 , 2023
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக முழுவதிலும் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கொண்டனர். இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்ததாவது, திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தல் வாக்குறுதையில் அறிவித்தபடி பகுதி நேர ஆசிரியர்களை […]

You May Like