fbpx

இதயநோய், சர்க்கரை நோய், மனநல பிரச்சனைகளுக்கு சூப்பர் தீர்வு..!! தினமும் இதை டிரை பண்ணுங்க..!!

நடைபயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த நடைபயிற்சியானது பல வகையில் ஆரோக்கியத்தை தருகிறது. அதே போன்று, உடல் பருமன் அதிகமாக இருப்போருக்கும் இது உதவுகிறது. மேலும், சர்க்கரை நோய், இதய நோய், மனநல பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கும் நடைபயிற்சி நல்ல தீர்வாக அமைகிறது. பொதுவாக நடைபயிற்சியை காலை நேரத்தில் பயிற்சியாக செய்வது தான் பெரும்பாலோரின் வழக்கமாகும். ஆனால், இதை உங்களது தினசரி செயல்பாடுகளில் சில எளிமையான வழிகள் மூலம் சேர்த்து கொண்டால் பலன் அதிகம். இதற்கான 6 எளிய மாற்றங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

படிக்கட்டுகளில் செல்லுங்கள் :

பொதுவாக நம்மில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டர்களில் செல்லும் பழக்கத்தை பின்பற்றி வருகிறோம். ஆனால், இனி முடிந்தவரை படிக்கட்டுகளில் செல்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு வேலையாக இருந்தாலும் சரி, ஷாப்பிங் மாலில் இருந்தாலும் சரி அல்லது வீட்டில் இருந்தாலும் சரி, படிக்கட்டுகளை அதிகம் பயன்படுத்துவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே போன்று, தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது ஒரு சிறந்த வழி.

இடைவேளையின் போது நடக்கவும் :

இன்று அதிக மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காரும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இது பல வகையில் உடல் மற்றும் மனதிற்கு பாதிப்புகளை தரும். எனவே, அவ்வப்போது இடைவேளைகளில் நடப்பது நல்லது. குறிப்பாக உங்கள் மதிய உணவு இடைவேளை அல்லது காஃபி இடைவேளையில் உட்கார்ந்திருப்பதை விட, விறுவிறுப்பாக ஒரு ரவுண்ட் நடக்கலாம். இது புதிய காற்றை சுவாசிக்கவும், உங்கள் ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புத்துணர்வு பெறவும் வாய்ப்பாக இருக்கும்.

வாகனங்களை தொலைவில் நிறுத்துங்கள் :

வாகனங்களை நிறுத்துமிடத்தில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, உங்கள் வாகனத்தை வேண்டுமென்றே சற்றுதொலைவில் நிறுத்துங்கள். இந்த எளிய மாற்றம் உங்கள் தினசரி நடையின் அளவை அதிகரிக்க உதவும்.

முன்னதாக இறங்கவும் :

நீங்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவராக இருந்தால், சில ஸ்டாப்பிங்கிற்கு முன்னதாகவே இறங்கி, மீதமுள்ள தூரம் நடந்து செல்லலாம். இது உங்களின் தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புதிய பகுதிகளை உங்களுக்கு தெரிந்து கொள்ளவும், இயற்கைக் காட்சிகளை அனுபவிக்கவும், நாள் முழுவதும் கூடுதல் உடற்பயிற்சியில் ஈடுபடவும் வழி செய்கிறது.

இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்:

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க கூடிய பணியில் இருந்தால், அவ்வப்போது சிறு சிறு இடைவேளைகளை எடுத்துக் கொண்டு நடந்து வரலாம். இதற்கு உங்கள் மொபைலில் ஒரு நினைவூட்டலை வைத்து கொண்டோ அல்லது டைமரைப் பயன்படுத்தி கொண்டோ ஒவ்வொரு மணி நேரமும் சில நிமிடங்கள் எழுந்து நடப்பதை வழக்கமாகி கொள்ளுங்கள்.

தினசரி நடைகள் :

பெடோமீட்டர், ஃபிட்னஸ் டிராக்கர் அல்லது ஸ்மார்ட்போன் ஆகியவற்றின் மூலம் உங்களது தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையைப் பற்றிய தெளிவை பெறுங்கள். இந்தச் சாதனங்கள், இலக்குகளை நிர்ணயிக்கவும், உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், ஒவ்வொரு வாரமும் படிப்படியாக உங்கள் ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மைல்கற்களை அடைய இவை உதவும்.

Read More : தீபாவளிக்கு 60,000 ஆந்தைகள் வரை கொல்லப்படும் விநோதம்..!! விலை கொடுத்து வாங்கி கொல்லும் மக்கள்..!! ஏன் தெரியுமா..?

English Summary

If you have a job that requires you to sit in one place for long periods of time, you can take small breaks and walk around from time to time.

Chella

Next Post

தீபாவளி மாசுபாடு!. பட்டாசுகளின் நச்சுப் புகை உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?.

Fri Nov 1 , 2024
Diwali pollution: How toxic smoke of firecrackers affects your health and what you need to know

You May Like