fbpx

பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிர்ந்து போன காவல்துறை….! மகராஷ்டிராவில் பரபரப்பு…..!

சென்ற பிப்ரவரி மாதம் மகராஷ்டிரா மாநிலம் முலுந்த் என்ற பகுதியில் இருக்கின்ற விடுதி ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் 3 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த வழக்கை விசாரித்த மும்பை விசாரணை நீதிமன்றம் 2 பெண்களை விடுதலை செய்து 34 வயதான பெண் ஒருவரை மட்டும் சீர்திருத்தப் பள்ளியில் ஒரு வருடத்திற்கு தங்க வைக்க உத்தரவு பிறப்பித்தது.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்க்கும் விதமாக, அந்தப் பெண் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் ஒரு மேஜர் காரணம் இல்லாமல் அவர் அடைத்து வைக்கப்பட்டால் அவருடைய உரிமைகள் மீறப்பட்டதாக தெரிவிக்கலாம்.

காவல்துறையின் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக எங்கேயும் குறிபிடப்படவில்லை . அவர் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் சுதந்திரமாக இருக்கலாம் அதற்கு உரிமை இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து வாதம் செய்த அரசு தரப்பு அவர் மறுபடியும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தெரிவித்து விடுதலை செய்யக்கூடாது என்று தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர் ஒரு மேஜர் எனவும், இந்திய குடிமகனாக சுதந்திரமாக நடமாடுவதற்கான அடிப்படை உரிமை அவருக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. நிச்சயமாக அந்த குழந்தைகளுக்கு அவர்களுடைய தாயுடன் இருப்பது அவசியமாகிறது. அதோடு பாதிக்கப்பட்டவர் அவருடைய விருப்பத்திற்கு மாறாக காவலில் வைக்கப்பட்டால் அது அவருடைய உரிமையை பறிப்பதாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதோடு, இல்லாமல் பாலியல் தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரத்தை மேற்கோள் காட்டி விடுதிகளில் தங்கள் விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களை கணக்கெடுத்து அவர்களை விடுவிக்க மாநில அரசின் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சென்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விசாரணையின் போது பாதிக்கப்பட்ட அந்த பெண் தான் எந்த ஒழுக்கக்கேடான செயல்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்து தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். விசாரணை நீதிமன்றம் தன்னுடைய தரப்பை பரிசீலனை செய்யாமலேயே இயந்திரத்தனமான இந்த உத்தரவை பிறப்பித்தது என்றும் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது பிரிவின் கீழ் இயங்கு வேண்டுமானாலும் செல்லவும் இயங்க வேண்டுமானாலும் வசிக்கவும் தனக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர் பெண்களை விபச்சாரத்திற்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு முலுந்த் விடுதியில் சோதனை நடத்தப்பட்டது எனவும், வாடிக்கையாளர்களைப் போல சென்று சோதனை செய்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Post

ஒருதலை காதலியின் தந்தையை சுட்டுக்கொன்ற கான்ஸ்டபிள்..!! தண்டவாளத்தில் சிதறி கிடந்த உடல்..!! பரபரப்பு

Wed May 24 , 2023
திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் ஒருதலைக் காதலியின் தந்தையை காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் பெர்ச்சா கிராமம் வழியாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடந்தது. அங்கு நாட்டுத் துப்பாக்கி, பைக் உள்ளிட்டவையும் இருந்தன. தகவலறிந்த போலீசார், அந்த உடலை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி […]

You May Like