fbpx

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்..!! அமைச்சர் வீட்டுக்கு தீவைப்பு..!! ராணுவம் குவிப்பு..!! பெரும் பரபரப்பு

மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு நாகா மற்றும் குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், இம்மாத தொடக்கத்தில் மணிப்பூரின் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதற்கிடையே, சில நாட்கள் அமைதி திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

பிஷ்ணுபூர் (Bishnupur) மாவட்டத்தில் உள்ள பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் கோவிந்தாஸின் வீட்டை வன்முறையாளர்கள் தீவைத்து எரித்துள்ளனர். நல்வாய்ப்பாக அப்போது அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் அங்கு இல்லை. உள்ளூர் மக்களை போராட்டக்காரர்களிடமிருந்து காப்பாற்றவில்லை என ஆதங்கத்தில் பெண்கள் அமைச்சர் வீட்டை தீயிட்டு எரித்துள்ளனர். சிங்டா கடாங்பந்த் (Singda Kadangband) பகுதியில் வன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் காயமடைந்ததாவும், அவர் ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மணிப்பூருக்கான பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறியுள்ளார். மேலும் ஏராளமான ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

தங்கம் விலை அதிரடி சரிவு! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

Thu May 25 , 2023
ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிகரித்திருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.  இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ரூ.45,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து […]

You May Like