fbpx

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்வி கங்காப்பூர்வாலா பதவியேற்றார்….!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மூத்த நீதிபதியான டி. ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு டி ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் நியமனம் செய்தார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்காபூர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி ஆவார்.

இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் என்று ஏராளமான பங்கேற்று கொண்டனர். அத்துடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டனர்.

கேரள மாநில முன்னாள் ஆளுநர் ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம், உச்சநீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உள்ளிட்டோர்ரும் வருகை தந்தனர் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்துறை செயலாளர் அமுதா முதல்வரின் தனிச்செயலாளர் முருகானந்தம் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டனர்

Next Post

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறப்பு…..! நாட்டுக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகிஆதித்யநாத்…..!

Sun May 28 , 2023
இன்று காலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். அதேபோல மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் தமிழகத்தின் செங்கோலும் நிறுவப்பட்டது. இத்தகைய நிலையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட இன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் பதிவு ஒன்றையும் […]

You May Like