fbpx

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் குறையாத வெயில்- 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவு!!

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. இதனை தொடர்ந்து மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர், நாகை, தஞ்சை, ஈரோடு ஆகிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Rupa

Next Post

ஜூன்-1 முதல் இலவசம் இல்லை- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு!

Tue May 30 , 2023
வரும் ஜூன்-1ம் தேதி முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் […]

You May Like