fbpx

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து பலி!!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் ( 40)  என்பவர் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள பிரசிக்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலின் கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பவுர்ணமி கிரிவலம் சென்ற நபர் பாதி வழியில் மயங்கி விழுந்து உயிரிழ்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Rupa

Next Post

இனிமேல் ஸ்பேம் கால், மெசேஜ் வராது!... வந்துவிட்டது புதிய டிஜிட்டல் தளம்!... டிராய் அதிரடி உத்தரவு!

Mon Jun 5 , 2023
ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 2 மாதங்களுக்குள் புதிய டிஜிட்டல் தளம் (DCA) ஒன்றை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிசிஏ-வை முன்னுரிமையாக உருவாக்கி பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் பிசினஸ் ஸ்டாண்டர்ட், TRAI ஆல் ஆராய்ச்சி செய்யப்படும் தொழில்நுட்பங்களின் நீண்ட பட்டியலில் […]

You May Like