தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அறிவுரை வழங்கவும், மாணவர்களை கட்டுப்படுத்தவும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல கற்பித்தலுக்கு 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் முடிவடைந்த பின்னரும் பொறுப்பை அடுத்தவர்கள் மீது முத்தாமல் ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்ற நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க போர்க்கால அடிப்படையில், காலியாக இருக்கின்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.