fbpx

பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 % கட்டுப்பாட்டு நீக்கம்…! மத்திய அரசு அதிரடி…!

துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான ஆதரவு விலை திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் எவ்வித அளவு கட்டுப்பாடுமின்றி இந்த பருப்புகளை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.

மேலும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பருப்புகள் முழுவதையும் நேரடியாக விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் எதிர்வரும் கரீஃப் மற்றும் ரபி பருவங்களில் அதிக அளவிலான பரப்பளவில் துவரம், உளுந்து மற்றும் மசூர் பருப்புகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, லாப நோக்கத்தில் வணிகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஜூன் 2-ம் தேதி 2023 அன்று அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் பருப்பு வகைகளை சேமிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விரைவில் விலக்கி கொள்ளப்படும்.

மேலும் பருப்புவகைகளை சேமிப்பதற்கான கட்டுப்பாடுகள் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் பொருந்தும். இவர்கள் தங்களுடைய சேமிப்பு விவரங்களை நுகர்வோர் நலத்துறையின் https://fcainfoweb.nic.in/psp என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

எப்படிச் சிரிக்க வேண்டும்!... புன்னகை பயிற்சி மையம்!... 1மணி நேரத்திற்கு ரூ. 4,500 கட்டணம்!... எங்க தெரியுமா?

Wed Jun 7 , 2023
சிரிக்க மறந்த மக்களுக்கு புன்னகை பயிற்சி மையம் ஒன்று அமைத்து எப்படிச் சிரிக்க வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறது. கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜப்பானியர்கள் முகக் கவசத்தை அணிந்து பொது இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இது கேட்க சாதனமாக இருந்தாலும் இது பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது. கோவிட் தொற்று அபாயம் குறைந்துள்ள நிலையில் மக்கள் முகக் கவசம் இன்றி வெளியிடங்களுக்கு செல்ல […]

You May Like