fbpx

சாட்ஜிபிடி போன்ற மாதிரி!… இது ஸ்டார்ட் அப்- களுக்கு பலன் தராது!… சிஇஓ சாம் ஆல்ட்மேன்!

சாட்ஜிபிடி போன்ற மாதிரியை உருவாக்க முயற்சிப்பது உங்களைப்போன்ற ஸ்டார்ட் அப்- களுக்கு பலன் தராது என்று சாட் ஜிபிடி(Chat GPT) தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறினார்.

ஓபன்ஏஐ, சாட் ஜிபிடி(Chat GPT) தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார், அப்போது அவரிடம் பீக்எக்ஸ்வி (PeakXV Partners) பார்ட்னர்ஸ்-இன் நிர்வாக அதிகாரி ராஜன் ஆனந்தன், OpenAI மற்றும் ChatGPT போன்றவற்றை உருவாக்குவது குறித்து கேட்ட போது, சாட்ஜிபிடி போன்ற மாதிரியை உருவாக்க முயற்சிப்பது உங்களைப்போன்ற ஸ்டார்ட் அப்- களுக்கு பலன் தராது என்று கூறினார்.

இது குறித்து தற்போது சமூக ஊடகங்களில் அவரது கருத்துகள் பரபரப்பாக பேசப்படுகின்றன. சாம் ஆல்ட்மேன் தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது நிறைய கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் முக்கியமாக அவர், இந்திய நிறுவனங்கள் சாட் ஜிபிடியை உருவாக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார். ஓபன்ஏஐ ஏற்கனவே சாட் ஜிபிடியை உருவாகிவிட்டதால் அதனுடன் போட்டியிட விரும்பும் நிறுவனங்கள் ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எங்களுடன் போட்டியிடுவது உங்களுக்கு வீண் முயற்சி, நீங்கள் முயற்சி செய்யலாம் அது உங்கள் வேலை, ஆனால் அது பலன் தராது என்று மேலும் கூறினார்.

Kokila

Next Post

முக்கிய அறிவிப்பு...! 12-ம் தேதி பள்ளிகள் திறப்பு...! 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

Sat Jun 10 , 2023
12-ம் தேதி பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் […]

You May Like