fbpx

மாணவர்களே..!! இன்று திறக்கப்படும் தமிழக பள்ளிகள்..!! அரசின் முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று 6-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1-5ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு இருந்தன. 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

பொதுவாக ஜூன் முதல்வாரம் தமிழ்நாட்டில் லேசாக மழை தொடங்கும். மழை இல்லை என்றாலும் வெயில் குறையும். இதனால் மாணவர்கள் பள்ளிகள் செல்ல வசதியாக இருக்கும். ஆனால், இந்த முறை வெயில் குறையவில்லை. மாறாக வெயில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வரை கூட உயர்ந்து உள்ளது. இதனால், மாணவ-மாணவியர் பள்ளிகளுக்கு செல்வது சிரமம் ஆகும். இதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு முன்னதாக 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் வெயில் குறையாத காரணத்தால் தற்போது இரண்டாவது முறையாக தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை முடிவில் இந்த தேதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிலபஸ் முடிக்க வேண்டும். அதனால் கொஞ்சம் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.

அதனால் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதே சமயம் சிறு குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாக திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் , 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அதே சமயம் தமிழ்நாட்டில் இன்னும் வெயில் குறையவில்லை. கடந்த வாரங்களில் நிலவிய அதே வெயில் இன்னமும் நீடிக்கிறது. முக்கியமாக சென்னையில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நீடிக்கிறது.

Chella

Next Post

’இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்’..!! ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த கும்பல்..!!

Mon Jun 12 , 2023
கோவையில் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை காட்டி ஏராளமான இளைஞர்களிடம் பல லட்சம் வசூலித்து மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ஆண், பெண்களுடன் ஜாலியாக இருக்க சில பிரத்யேகமான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்தி பெரும் மோசடி நடப்பதாக கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், இந்த இணையதளத்தில் புகைப்படங்களை […]

You May Like