இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்த அட்டை மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் வழங்கப்பட்டிருக்கும். வங்கி பரிவர்த்தனை தொடங்கி அரசின் சலுகைகள் பெறுவது வரை இப்போது ஆதார் ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு முக்கியமான அடையாளமான ஆதார் அட்டையை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுதல் நல்லது.
அந்த வகையில், இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14, 2023 (இன்று) வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆதார் அட்டையை இலவசமாக ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் ஆதார் அட்டை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அதை தற்போதுள்ள சான்றிதழ் படி புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இந்த செயல்முறைகளைத் தான் UIDAI கூறியுள்ளது. இதற்கான நடைமுறையை ஆன்லைனில் செய்தால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. உங்கள் அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆவணங்கள் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இந்த சேவை இலவசமாக ஜூன் 14 வரை (இன்று ) வழங்கப்படுகிறது.
இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
- https://uidai.gov.in என்ற இணையதளம் சென்று My Aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு Update Your Aadhar என்பதை கிளிக் செய்து அதில் Demographics Data Online ஆப்சனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
- இப்போது அப்டேட் செய்வதற்கான பக்கம் திறக்கும். அதில் Proceed to Aadhar Update என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து அந்தப் பக்கத்தில் இருக்கும் கேப்ட்சாவையும் பதிவு செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட வேண்டும்.
- அடுத்து Document Update க்ளிக் செய்து விவரங்களை சரி பார்க்கவும்.
- இப்போது உங்கள் பெயர் மற்றும் முகவரி சான்றுக்கான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
- அவ்வளவு தான் இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு நீங்கள் அப்டேட் செய்ததற்கான ரசீது மற்றும் service request number அனுப்பி வைக்கப்படும். அதை கொண்டு ஸ்டேட்டஸ் டிராக் செய்து கொள்ளலாம்.
- உங்கள் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி விவரங்கள் தவறாக இருந்தால் ஆதார் புதுப்பித்தல் கூடாது. முதலில் தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும். தவறுகளை திருத்தம் செய்த பிறகே புதுப்பிக்க வேண்டும்.
- இந்த சேவையை இலவசமாக பெற ஜூன் 14(இன்று) என்பதை நினைவில் கொள்ளுங்கள்.