பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் என்பது நூறு சதவீதம் அளவிற்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது.
இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட் பெருந்தொற்றின் போது அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில் இருந்து ரூ.1.86 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயனாளிகள் ரூ.57,628 கோடி பெற்றுள்ளனர்.
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினர் பயனடைந்துள்ளதாக சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.