திருச்சி மாவட்டம் வாளாடி அருகே கடந்து 2ம் தேதி ரயில்வே தண்டவாளத்தில் 2 டயர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் அந்த டயர்கள் மீது மோதலில் ரயில் இன்ஜினில் இருந்த மின் இணைப்பு பெட்டி சேதம் அடைந்தது. இதனால் அடுத்தடுத்து நான்கு பெட்டிகளில் மின்சார தடை ஏற்ப்பட்டுள்ளது.. ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக, மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாச்சலம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் தலைமையிலான 3 தனிப்படை காவல்துறையின் ஒரு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இத்தகைய நிலையில், 10 நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 3 பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
இது குறித்து திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியதாவது, செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 33 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்த பிரபாகரன் (44), கார்த்தி (33), வெங்கடேசன்(36) உள்ளிட்டோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது தங்களுடைய பகுதிகளுக்கு தேவைப்படும் சாலை வசதி, சுரங்கப்பாதை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், இந்த சேவையில் ஈடுபட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களின் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.