நாட்டில் நோய் கற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,067 ஆக பதிவாகி இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 106 பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,93,186 என அதிகரித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனை தொடர்ந்து, இந்த நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 5,31,393 என இருக்கிறது.
இதுவரையில் ஒட்டுமொத்தமாக இந்த நோய் தொற்றிலிருந்து 4,44,59.226 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். ஆகவே குணமடைந்தோரின் விகிதம் 98.81 சதவீதமாக இருக்கிறது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரையில் 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.