”என் மகள் பெயரை வேறு யாரும் வைக்கக் கூடாது”..!! வடகொரிய அதிபர் அதிரடி உத்தரவு..!!

தங்களின் குடும்ப பெயர்களை நாட்டு மக்கள் வேறு யாரும் வைக்க கூடாது. அதிலும் குறிப்பாக தன் மகளின் பெயரை வேறு யாரும் வைக்கவே கூடாது. அப்படி வைத்திருந்தால் ஒரு வாரத்திற்குள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மரணம் கூட நிகழும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் அதிபர் கிம் ஜாங் உன்.

வடகொரியாவில் தான் இப்படி ஒரு கொடுமை நடக்கிறது. வடகொரியா நாட்டில் மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த அரசின் தணிக்கைக்கு பிறகு தான் அந்நாட்டில் செய்திகள் வெளியாகின்றன. நாட்டு மக்கள் சுதந்திரமாக சமூக வலைதளங்களை கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன் தங்களின் குடும்ப பெயர்களை நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தன் மகளின் ‘ஜூஏ’ பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தனது மகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தினார். தற்போது தன் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள் ஒரு வாரத்திற்கு பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனால் வடகொரிய மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். வடகொரியா மக்களின் தொகை 2.6 ஆகும். இதில் கிம் பெயர் கொண்டவர்கள் சுமார் ஒரு கோடி என்பது தெரியவருகிறது. இத்தனை பேரும் தங்கள் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றால்… அடாவடி அதிபரால் பெரும் சிக்கலில் இருக்கிறார்கள் வடகொரிய மக்கள்.

Chella

Next Post

பேரிக்காயில் இவ்வளவு மகத்துவம் உள்ளதா?... மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடுங்க!

Mon Feb 20 , 2023
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம் பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன.இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு […]

You May Like