அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.
அந்த வீடியோவில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்க துறை மூலமாக கொடுக்கப்படும் அநியாயமான தொந்தரவுகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும், இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நாங்கள் ஆட்சிக்கு மட்டும் கட்சியை நடத்துபவர்கள் இல்லை, நாங்கள் கொள்கைக்காக கட்சி நடத்துபவர்கள் கொள்கையை காப்பாற்ற தான் கடைசி வரையில் போராடுவோம் என்று கூறியிருக்கிறார். மேலும் மனம் மற்றும் உடல் ரீதியாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் செந்தில் பாலாஜிக்கு இதய நோயை ஏற்படுத்தி இருக்கிறார்கள், இதைவிட அப்பத்தமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும் 5 முறை சட்டசபை உறுப்பினராகவும் 2 முறை அமைச்சராகவும் இருக்கின்ற செந்தில் பாலாஜியை ஏதோ தீவிரவாதியை போல அடைத்து வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்ன? என்று கேள்வி எழுந்திருக்கிறார்.
மேலும் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறதா? உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் பூஜையில் ரெய்டுகள் நடத்தப்படாத ஏனென்றால் அங்கே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்று கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.