சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர் இதனை தொடர்ந்து அதற்கு நெஞ்சு வலி உண்டானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தில் அடைப்பு உள்ளதாகவும் உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வசம் இருந்த 2 துறைகளையும் மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக மாற்றக்கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே தமிழக ஆளுநரை இன்று மாலை அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து தமிழக அமைச்சர் அருகில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கூறி மனு வழங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது