தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் இருக்கின்ற இருக்கின்ற 33 வார்டுகளில் நிரந்தர மற்றும் தனியார் மையம் என 2️ வகையான தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று நிரந்தர தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தனியார் மையத்தில் பணிபுரியும் சுமார் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர். அரசு அலுவலக வளாகத்திற்கு கூட்டம் நடத்தக்கூடாது என்று தெரிவித்ததால் அலுவலக பின்புறம் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் பணி சுமையை குறைப்பதற்காக பணியாளர்களை அதிகப்படுத்துதல் பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பிறகு முற்றுகையை கைவிட்டு ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து கலைந்து சென்றனர்.