ஐயா கக்கன் வழியில் எளிமையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உறுதி ஏற்ப்போம் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
டிவி தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது சுதந்திரப் போராட்ட வீரரும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய அமைச்சரவையில் அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்தவரும் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வர்களில் ஒருவருமான ஐயா கக்கன் பிறந்த தினம் இன்று எனக் கூறியுள்ளார்.
நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமான ஐயா கக்கன் அவர்களுக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு அன்றைய பாரத பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு தபால் தலையை வெளியிட்டு கௌரவித்தது. ஐயா கக்கன் வழியில் நேர்மையான எளிமையான அனைவருக்கும் ஆன அரசியலை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உறுதியேற்போம் என அவர் தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்