சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டனர். மழையின் அளவு குறைவானதால் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று செங்கல்பட்டு,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.