fbpx

உடற்கல்வி வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் – அமைச்சர் உதயநிதி

முதலமைச்சர் கோப்பைகான விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பைகான மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதைத் தொடாந்து அங்க பேசிய அமைச்சர் உதயநிதி, “பல எழுத்தாளர்களையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கிய தஞ்சை மண், இனிவரும் காலங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் P.E.T வகுப்புகளை கடன் வாங்காதீர்கள். உங்கள் வகுப்புகளை வேண்டுமென்றால் கடன் வழங்கி மாணவர்களை விளையாட அனுமதியுங்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோளாக இதை வைக்கிறேன். மாணவர்களே… எதற்கும் தயாராக, எதற்கும் தயங்காமல் உங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் ஆட்ட களங்கள் காத்திருக்கின்றன” என்றார்.

Maha

Next Post

ஓடும் பேருந்தில் ஆபாச செய்கை..!! ஆசாமிக்கு செருப்படி கொடுத்த இளம்பெண்..!! கோவையில் பரபரப்பு..!!

Tue Jun 20 , 2023
மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் ஆபாசமாக நடந்த ஆசாமியை இளம்பெண் சரமாரியாக செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த இளம்பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து இளம்பெண் கோவை பேருந்தில் ஏறினார். அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த 50 வயதுக்கு மேலுள்ள ஆண் ஒருவர், திடீரென பெண்ணிடம் ஆபாச செய்கை காண்பித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வேறுபக்கம் […]
ஓடும் பேருந்தில் ஆபாச செய்கை..!! ஆசாமிக்கு செருப்படி கொடுத்த இளம்பெண்..!! கோவையில் பரபரப்பு..!!

You May Like