உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தனது வரலாற்றில் எப்போதும் பெற்றிடாத வகையில் ஓரே ஆர்டரில் சுமார் 500 விமானங்களை இண்டிகோ ஆர்டர் செய்து அசத்தியுள்ளது. மார்ச் மாதம் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா சுமார் 470 விமான நிறுவனங்களை ஆர்டர் செய்தது. உலகளவில் 3வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் இந்தியாவின், இண்டிகோ நிறுவனத்தின் ஆதிக்கம் இந்த 500 விமானங்கள் மூலம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் ஏர் இந்தியாவும் சரி, இண்டிகோ நிறுவனமும் சரி சேவை அளிக்கும் இடங்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விமான போக்குவர்த்து இந்தியாவில் சூடுப்பிடித்துள்ளது, மேலும் ஏர் இந்தியா மற்ரும் இண்டிகோ உள்நாட்டு விமான சேவை உடன் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருவதால் விரைவில் இந்திய ஏவியேஷன் துறையில் வியக்க வைக்கும் மாற்றத்தை பார்க்க முடியும். இண்டிகோ ஆர்டர் செய்துள்ள இந்த 500 ஏர்பஸ் 320 ரக விமான ஆர்டரின் மொத்த மதிப்பு 50 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கிடப்படுகிறது. 50 பில்லியன் டாலர் எனில் இந்திய ரூபாய் படி சுமார் 4.10 லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவில் பல சேவைகளை எளிதாக தற்போது கிடைப்பது போல் பிரைவேட் ஜெட்-ஐ சொந்தமாக்குவதும் தற்போது ஈசியாகியுள்ளது . இந்திய விமான சேவையில் புரட்சியை செய்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் முன்னாள் வருவாய் பிரிவு தலைவரும், மார்கெட்டிங் பிரிவின் தலைவருமான ஜான் குருவில்லா OTT தளத்திற்கு சப்ஸ்கிரிப்ஷன் செய்வது போது பிரைவேட் ஜெட்-க்கு சப்ஸ்கிரிப்ஷன் மாடல் கொண்ட வர்த்தகத்தை Indiajets நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார். இதோடு Go First நிறுவனத்தின் வர்த்தக இடத்தை நிரப்ப ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மத்திய அரசிடம் 400 கோடி ரூபாய் கடனை பெற்று இந்நிறுவனம் தரையிறக்கப்பட்ட 25 விமானங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.