fbpx

ஐசிசி டெஸ்ட் தரவரிசை!… இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்!… NO.1 இடத்தில் இந்திய வீரர்கள்! விவரம் இதோ!

ஐசிசி தலைமை நிர்வாக தரப்பில் இருந்து புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களின் முடிவில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்த கையோடு ஆஷஸ் தொடரானது ஆரம்பித்துள்ள வேளையில் தற்போது ஐசிசி தலைமை நிர்வாக தரப்பில் இருந்து புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் 46 ரன்களையும் அவர் குவித்ததால் 887 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

அதேபோன்று முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணியின் வீரரான லாபுஷேன் தற்போது மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், டிராவிஸ் ஹெட் நான்காவது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை பொருத்தவரை இந்திய வீரர்களில் ரிஷப் பண்ட் மட்டுமே பத்தாவது இடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 12-ஆவது இடத்திலும், விராட் கோலி 14-வது இடத்திலும் உள்ளனர். அதேவேளையில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மேலும் முதல் 10 இடங்களில் பும்ரா எட்டாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். அதோடு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும், அக்சர் பட்டேல் நான்காவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

ஆப்கானிஸ்தான் வீரருக்கு தனது NO.7 ஜெர்சியை பரிசளித்த தோனி!... ட்விட்டரில் பகிர்ந்து நெகிழ்ச்சி!

Thu Jun 22 , 2023
ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், ஐபிஎல் இல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வீரருமான ரஹ்மனுல்லா குர்பாஸ்-க்கு தோனி தனது சிஎஸ்கே அணி நம்பர்-7 ஜெர்ஸியை பரிசாக அனுப்பியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட்டராக திகழ்ந்து வருகிறார். அனைத்து நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களும் கூட தோனிக்கு ரசிகர்கள் […]

You May Like