புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் சிவகுமார்.
இவர் மீது போக்சோ வழக்கை தவறாக கையாண்டது, காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்து போட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என்று பல்வேறு புகார்கள் எழுந்தனர். இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில், இவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இவர் மீது துரை ரீதியான விசாரணை நடந்தது அந்த விசாரணை அறிக்கை பார்வையிட்ட டிஜிபி மனோஜ் குமார் இன்ஸ்பெக்டர் சிவகுமாரை அந்த பதவியில் இருந்து சப்இன்ஸ்பெக்டராக பதவியிறக்கம் செய்து உத்தரவு பிறக்கத்திருக்கிறார்