பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் கடைகளில் இருந்து சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக சிறுமியின் தந்தை மனுதாக்கல். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]

தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் லாக் அப் டெத் கிடையாது. இதை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதுரை அருகே திருப்புவனம் பகுதியில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலியில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். திருட்டு வழக்கு தொடர்பாக இவரை விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், இவரின் தம்பியையும் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் […]

திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டிகளும் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த பெரும் […]

அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது […]

விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது காரை ஓரமாக பார்க் செய்யுங்கள் என்று கூறி அஜித்திடம் […]

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான […]

விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை பணத்தை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த வீரதுர்கா நீலிமா (26) என்பவர், திருமணம் முடிந்த பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் ஆண்கள் மீது பரிதாபம் காட்டும் போல் பழகி, நெருக்கம் காண்பித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன் வலையின் […]

பாலியல் புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர்கள் தாக்கிய விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாகிய நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி […]

பிரான்ஸில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற வருடாந்திர உலக இசை தினம் நிகழ்ச்சியில், 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் டீன் ஏஜ் பெண்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வைத்திருந்த ஊசிகளில் ரோஹிப்னால் அல்லது GHB போன்ற பாலியல் வன்கொடுமை மருந்துகள் இருந்ததா என்பது […]

கேரள மாநிலத்தில், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளின் வீடுகளில், போலீசார் இரவில் வாரண்ட் இல்லாமல் நுழைவதைத் தடை செய்யும் வகையில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி வி.ஜி. அருண் வழங்கிய தீர்ப்பில், வீட்டின் தனித்தன்மையை காவல்துறை மதிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் காவல் துறை கையேட்டில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கேரள […]