fbpx

சம்பளத்துடன் ஒருவருட பயிற்சி..! டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!… மிஸ் பண்ணிடாதீங்க!

எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் செயல்படும் டிவி , எல்இடி பல்புகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் பகவதி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படித்தவர்களுக்கு 1 வருட சம்பளத்துடன் அப்பரன்டீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இம்மாத இறுதிக்குள் (30 – ஜூன் – 2023) விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு 1 வருட அப்ரண்டீஸ் பயிற்சி.

காலிப்பணியிடங்களுக்கான பொறியியல் பிரிவு : இயந்திர பொறியியல் – 10. மின் பொறியியல்- 10. எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்- 80. கணினி அறிவியல் & பொறியியல்- 10. தகவல் தொழில்நுட்பம்- 10 பொது பட்டதாரிகள் (பொறியியல் அல்லாத பட்டதாரி) – 60. டிப்ளமோ – 70 (பல்வேறு பிரிவுகளில்)

கல்வித்தகுதி : தேவைப்படும் பிரிவுகளில் இளங்கலை பொறியியல், டிப்ளமோ , ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) : பொறியியல் அப்ரண்டீஸ் – ரூ.12,000/, டிகிரி பிரிவு – ரூ.11,000/, டிப்ளமோ – ரூ.11,000/, வயது வரம்பு – குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஜூன் 2023 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை : அரசு அதிகாரபூர்வ அப்ரண்டீஸ் தளமான portal.mhrdnats.gov.in க்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் மாணவர் என குறிப்பிட்டு புதிய அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர் , உரிய ஆவணங்கள் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவ்ர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு அழைக்கப்படுவர்.

Kokila

Next Post

ஒரே பாலின திருமண சட்டம்!... நாடாளுமன்றம் ஒப்புதல்!... அடுத்தாண்டு முதல் அமல்!

Fri Jun 23 , 2023
ஒரே பாலின திருமண சட்டத்திற்கு எஸ்தோனியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக 101 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், இந்த மசோதா 55 வாக்குகளைப் பெற்றது. இச்சட்டம் 2024ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. 2023ம் ஆண்டு 1.3 மில்லியன் மக்கள் வாழும் பால்டிக் நாட்டில், மனித உரிமைகளுக்கான மையம் நடத்திய வாக்கெடுப்பில், 53% […]

You May Like