திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் காலையில் வசித்து வருபவர் அய்யனார், இவருடைய மனைவி வள்ளியம்மாள் (55) இவர்களுக்கு ராசாத்தி(32) என்ற மகளும், லட்சுமணன் (35) என்ற மருமகனும் இருக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர் கள்ளிப்பட்டி அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தான் நேற்று இரவு 8 மணி அளவில் வள்ளியம்மாள் அவருடைய மகன் ராசாத்தி மருமகன் லட்சுமணன் உள்ளிட்டோர் வீட்டில் அமர்ந்திருந்த போது மர்மநபர்கள் சிலர் கையில் கூர்மையான ஆயுதங்களுடன் திடீரென்று அன்று வந்து தாயையும், மகளையும் கொடூரமான முறையில் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க முயற்சி செய்த மருமகன் லட்சுமணனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதில் தாய், மகள் இருவரும் அதே இடத்தில் துடி, துடித்து உயிரிழந்தனர். இதில் லட்சுமணனுக்கு வயிற்றில் கத்தி குத்து விழுந்து உள்ளது. மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் வள்ளியம்மாள் மற்றும் ராசாத்தி இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புத்தனர் அதோடு சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், விசாரணையை துரிப்படுத்தி இருக்கிறார். அதோடு இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்கள் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.