தமிழகம் முழுவதும் தற்போது வெயில் வாட்டி, வதைத்து வருகின்ற நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இதமான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் எதிர்வரும் 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வட தமிழக பகுதிகளை பொறுத்தவரையில் அந்த பகுதிகளின் மேல் மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் எதிர்வரும் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.