தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல் சார்பாளர் தாலுகா ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட 621 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த வேலையின் சேர்வதற்கு ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருந்தால் போதுமானது மேலும் வயது வரம்பு என்பது வரும் ஜூலை மாதம் 1ம் தேதி அன்று o/c-20-30, BC,MBC,BCM-20-32, sc/st/sca-20-35க்குள் இருக்க வேண்டும் இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் வரும் 30 6 2023 என சொல்லப்பட்டு இருக்கிறது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.tnusrb.tn.gov.in ஆகும்.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் சென்ற மே மாதம் 29ஆம் தேதி அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக வந்து பங்கேற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலிப்பணியிட தேர்வு குறித்த விவரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். அதோடு மேலும் விவரங்களுக்கு இந்த அலுவலக தொலைபேசி எண்களான 7811863916 மற்றும் 9499966026 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.