fbpx

விடாது கருப்பு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…..! 28ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு…..!

வங்க கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரையில் பரவலாக மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய ஒடிசா கடற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.

ஆகவே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் அடுத்தடுத்து 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது சில பகுதிகளில் கணவாய் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதோடு தலைநகர் சென்னை உட்பட பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கத்தரி வெயில் காலம் முடிவடைந்த பின்னரும், வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். அதே நேரம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அவ்வப்போது குளிர்ந்த சூழ்நிலை காணப்படுகிறது ஆகவே பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.20,000 மாத ஊதியம்...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...

Mon Jun 26 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள […]

You May Like